அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் கரூரை அடுத்த புஞ்சைகடம்பங்குறிச்சியில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதி பொத
கரூர்,
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்கரூரை அடுத்த புஞ்சைகடம்பங்குறிச்சியில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்த தரவில்லை என்று கூறி நேற்று கரூர்– புஞ்சைகடம்பங்குறிச்சி சாலையில் சென்ற மணல் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் அம்பாயிரநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்புஅப்போது அதிகாரிகள் கூறுகையில், அடிப்படை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று கரூர்– புஞ்சைகடம்பங்குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.