நெற்பயிர் கருகியதை கண்டு மனமுடைந்த விவசாயியின் மனைவி தற்கொலை


நெற்பயிர் கருகியதை கண்டு மனமுடைந்த விவசாயியின் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 26 Dec 2016 3:15 AM IST (Updated: 26 Dec 2016 1:54 AM IST)
t-max-icont-min-icon

லால்குடியை அடுத்த செம்பரை விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவருடைய மனைவி லெட்சுமி (வயது 45). கணவன்–மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆண்டு நெல் பயிரிட்ட

லால்குடி

லால்குடியை அடுத்த செம்பரை விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவருடைய மனைவி லெட்சுமி (வயது 45). கணவன்–மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆண்டு நெல் பயிரிட்டனர். போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் முதிர்ச்சியடையாமல் கருகியது. இதனால் ராஜாவும், அவரது மனைவி லெட்சுமியும் கவலை அடைந்தனர்.

 மேலும் லெட்சுமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த லெட்சுமி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

 இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story