கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கொப்பிலிப்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சப்பன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு கடனுதவி கேட்டு பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனால் அந
மதுரை,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கொப்பிலிப்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சப்பன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு கடனுதவி கேட்டு பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனால் அந்த மனு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் முனமுடைந்த அவர் நேற்று காலை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்து அவரை காப்பாற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story