காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:45 AM IST (Updated: 26 Dec 2016 10:45 PM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மணல் குவாரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது ஆழங்காத்தான் கிராமம். இந்த கிராமத்துக்கு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி உள்ளது

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது ஆழங்காத்தான் கிராமம். இந்த கிராமத்துக்கு அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 500–க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமத்தில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த பகுதி இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

லாரிகளை சிறைபிடித்தனர்

இந்த நிலையில் நேற்று காலை இளைஞர்கள் அந்த பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி குவாரிக்கு மணல் அள்ளுவதற்காக சென்ற லாரிகளை மறித்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அரசு உத்தரவு படி மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story