வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் குறைதீர்வுநாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று குறைதீர்வுநாள் கூட்டத்தில் கோரிக்கைமனு கொடுக்கப்பட்டுள்ளது. குறைதீர்வுநாள் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள்குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடந்தது. அதன்படி நேற்று நடந்
வேலூர்,
வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று குறைதீர்வுநாள் கூட்டத்தில் கோரிக்கைமனு கொடுக்கப்பட்டுள்ளது.
குறைதீர்வுநாள் கூட்டம்வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள்குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடந்தது. அதன்படி நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர். முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ரேஷன்கார்டு, வீட்டுமனைபட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர்கள் கொடுத்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.
வறட்சி மாவட்டமாகதமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் ராஜாபெருமாள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் ‘‘வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழைபெய்யவில்லை. இதனால் விவசாய பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டன. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குடிநீருக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வார்தா புயலால் வாழை மரங்கள், மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் அழிந்துவிட்டன. அதற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
அதேபோன்று 49–வது வார்டு கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கொடுத்துள்ள மனுவில் ‘‘எங்கள் பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சதுப்பேரியில் கால்வாய் தூர்வாராமலும், குப்பைகளை அகற்றாமலும் இருக்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயால் பாதித்து வருகிறார்கள். பொதுமக்களின் நலன்கருதி கால்வாயை தூர்வாரி, குப்பைகளை அகற்றவேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.