அரசு கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் மணல்மேட்டில் நடந்தது
மணல்மேட்டில், அரசு கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ– மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கட்டிடம் மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி 2012–ம் ஆண்டு தொடங்கப்பட்டு வாடகை
மணல்மேடு,
மணல்மேட்டில், அரசு கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ– மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய கட்டிடம்மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி 2012–ம் ஆண்டு தொடங்கப்பட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. பின்னர் இதற்காக 5.85 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2015–ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் 10 வகுப்பறைகள் கொண்ட தற்காலிக கட்டிடம் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மீதமுள்ள இடத்தில் கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.7 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டு நூலகம் ஆய்வுக்கூடம், 25–க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கொண்ட கீழ்தளம் மற்றும் 2 மேல்தளத்துடன் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஒரு மாத காலம் ஆகிறது என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தற்காலிக கட்டிடத்தில் தற்போது 450–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் படித்து வருவதால், இடவசதி போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
வகுப்புகள் புறக்கணிப்புஇந்த நிலையில் நேற்று கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை உடனே திறக்கக்கோரி மாணவ– மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் புதிய கட்டிடத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கல்லூரி அருகே பஸ்கள் நின்று செல்ல வேண்டும், பற்றாக்குறையாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கடலூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் இருந்து கல்லூரி வேளை நேரத்திற்கு பஸ் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார், மேற்கண்ட பகுதிக்கு விரைந்து சென்று மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவ– மாணவிகள் கலைந்து சென்றனர்.