கோவிலில் திருட முயன்ற கொள்ளையனை அடித்து கொன்ற 7 பேர் கைது


கோவிலில் திருட முயன்ற கொள்ளையனை அடித்து கொன்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 12:26 AM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடி அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையனை அடித்துக்கொன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணமார் கோவில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரன்பாளையத்தில் பிரசித்திப்பெற்ற அண்ணமார் கோவில் உள்ளது. கடந்த 24–ந் தேதி நள்ளிரவு 1 மணி அளவி

கவுந்தப்பாடி,

கவுந்தப்பாடி அருகே கோவிலில் திருட முயன்ற கொள்ளையனை அடித்துக்கொன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணமார் கோவில்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள வளையக்காரன்பாளையத்தில் பிரசித்திப்பெற்ற அண்ணமார் கோவில் உள்ளது. கடந்த 24–ந் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் இந்த கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்த கோவில் உண்டியலை கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்தனர்.

உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு கோவில் அருகே உள்ள வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உடனே கோவிலை நோக்கி சென்றனர். அப்போது 2 பேர் அங்கு நின்று கொண்டு கோவில் உண்டியலை உடைத்து அதில் உள்ள காணிக்கை பணத்தை திருட முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சாவு

உடனே அவர்கள் அனைவரும் கோவிலில் திருட முயன்ற 2 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே 2 பேரையும் பொதுமக்கள் பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இதில் ஒரு கொள்ளையன் மட்டும் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட கொள்ளையனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த கொள்ளையனை அங்கிருந்த சிலர் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

7 பேர் கைது

இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘இறந்தவர் ஈரோட்டை அடுத்த ஆர்.என்.புதூர் அருகே உள்ள சி.எம்.நகரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 46) என தெரியவந்தது. அதுமட்டுமின்றி பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதையொட்டி வளையக்காரன்பாளையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பழனிச்சாமியை அடித்து கொன்றதாக வளையக்காரன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 34), தேவராஜ் (68), முத்துவேல் (32), வடிவேல் (61), வளையக்காரன்பாளையம் அருகே உள்ள ராமக்கவுண்டன் வலசை சேர்ந்த தேவராஜ் (68), சரவணன் (34), அண்ணா நகரை சேர்ந்த சின்னராஜ் (53) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.


Next Story