இரும்பு கம்பியால் குத்தி டிரைவர் படுகொலை: தலைமறைவான இருந்த பிளஸ்–1 மாணவர் உள்பட 3 பேர் கைது
ஆனைமலை அருகே இரும்பு கம்பியால் குத்தி டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பிளஸ்–1 மாணவர் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– டிரைவர் படுகொலை கோவை மாவட்டம் ஆனைமலையை அட
ஆனைமலை
ஆனைமலை அருகே இரும்பு கம்பியால் குத்தி டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பிளஸ்–1 மாணவர் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
டிரைவர் படுகொலைகோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்துள்ள வக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 24). இவர்களது மகள் சர்மிளா (2). மகாலட்சுமி தனது கணவரிடம் கோபித்து கொண்டு தனது தந்தை மாசாணி வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கார்த்திகேயன் தனது மனைவியை பார்ப்பதற்காக மகாலட்சுமியின் தம்பி மா.கார்த்திகேயனுடன் மாமனார் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த மாமனாரின் தம்பி முருகனுக்கும், கார்த்திகேயனுக்கு திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் (44) தனது மகன்களான திலிப் (18) மற்றும் பிளஸ்–1 படிக்கும் 16 வயதுடைய மற்றொரு மகனுடன் சேர்ந்து கார்த்திகேயன் மற்றும் மா.கார்த்திகேயன் ஆகியோரை இரும்பு கம்பியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மா.கார்த்திகேயன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
தனிப்படை அமைப்புஇதுகுறித்து தகவல் தெரிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை தெரிந்த கொண்ட முருகன் தனது மகன்களுடன் தலைமறைவானார். இதையடுத்து ஆனைமலை போலீசார் உயிருக்கு போராடிய மா.கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன கார்த்திகேயனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கார்த்திகேயனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க ஆனைமலை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், கோட்டூர் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேர் கைதுஇந்த தனிப்படை போலீசார் ஆவல்சின்னாம்பாளையத்தில் பதுங்கி இருந்த முருகன் உள்பட 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு முருகன் மற்றும் திலிப் ஆகிய 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது கொண்ட பிளஸ்–1 மாணவர் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.