பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியில் புலி தாக்கி குட்டியானை சாவு


பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியில் புலி தாக்கி குட்டியானை சாவு
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 1:34 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியில் புலி தாக்கி குட்டியானை ஒன்று இறந்து கிடந்தது. இறந்து கிடந்த குட்டியானை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் கடந்த

மேட்டுப்பாளையம்

பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியில் புலி தாக்கி குட்டியானை ஒன்று இறந்து கிடந்தது.

இறந்து கிடந்த குட்டியானை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த நிலையில் சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட கூத்தாமண்டி சுற்றுக்கு அருகே பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் நேற்று வேட்டைத்தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஆற்றங்கரையோர பகுதியில் ஒரு ஆண் குட்டியானை இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து வனச்சரகர் மனோகரனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம், வனச்சரகர் மனோகரன், வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குட்டியானையை பார்வையிட்டனர். தொடர்ந்து குட்டியானையின் உடலை கால்நடை டாக்டர் மனோகரன் பரிசோதனை செய்தார். பின்னர் அதன் உடலை தீ வைத்து எரித்தனர்.

புலி தாக்கி இறந்தது

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

இறந்தது 2 அல்லது 2¼ வயது மதிக்கத்தக்க ஆண் குட்டியானை ஆகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுயானை கூட்டத்தோடு தண்ணீர் குடிக்க வந்தபோது, புலி தாக்கி குட்டியானை இறந்து உள்ளது. அதன் தலையில் புலி தாக்கியதற்கான காயங்கள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story