புழல் அகதிகள் முகாம் மற்றும் புழல் ஏரி பகுதிகளில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு


புழல் அகதிகள் முகாம் மற்றும் புழல் ஏரி பகுதிகளில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 27 Dec 2016 5:15 AM IST (Updated: 27 Dec 2016 1:42 AM IST)
t-max-icont-min-icon

புழல் அகதிகள் முகாம், புழல் ஏரி மற்றும் செங்குன்றத்தில் உள்ள நவீன அரிசி ஆலைகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு சென்னையை அடுத்த புழல் காவாங்கரையில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 400–க்கும் மேற்பட்ட வீடுக

செங்குன்றம்,

புழல் அகதிகள் முகாம், புழல் ஏரி மற்றும் செங்குன்றத்தில் உள்ள நவீன அரிசி ஆலைகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னையை அடுத்த புழல் காவாங்கரையில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 400–க்கும் மேற்பட்ட வீடுகளில் 1,300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 12–ந்தேதி வீசிய ‘வார்தா’ புயலால் 150–க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீடுகளை நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது முகாமில் உள்ளவர்கள் தங்களுக்கு 2 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை, வீடுகள் சீரமைக்கப்படவில்லை என தெரிவித்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது மாதவரம் தாசில்தார் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் உமாமகேஷ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

புழல் ஏரியில்...

அதன் பின்பு புழல் ஏரிக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன் மதகு பகுதி அருகே ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஏரியில் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கிருந்து செங்குன்றம் சென்ற அவர் அங்கு ‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த 50–க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளை பார்வையிட்டார்.

அப்போது தமிழ்நாடு நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சம்மேளன தலைவர் டி.துளசிங்கம், ‘வார்தா’ புயலால் நவீன அரிசி ஆலைகள் பாதிக்கப்பட்டன. இதனால் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், வங்கி கடன் தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தார். அதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி மாவட்ட தலைவர் எம்.பாஸ்கரன் மாவட்ட செயலாளர்கள் சென்னை சிவா, செந்தில், புழல் ஒன்றிய பொறுப்பாளர்கள் எஸ்.சுந்தரம், கணேசன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.


Next Story