திருப்பூரில் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் அனுமதியில்லாமல் அத்துமீறி விவசாய நிலங்கள் வழியாக தனியார் காற்றாலை முதலாளிகளின

திருப்பூர்

திருப்பூரில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் அனுமதியில்லாமல் அத்துமீறி விவசாய நிலங்கள் வழியாக தனியார் காற்றாலை முதலாளிகளின் லாப நோக்கத்துக்காக உயர் மின்கோபுரம் அமைக்க முயன்று வரும் தனியார் நிறுவனத்தை கண்டித்தும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் மின்வாரியத்தை கண்டித்தும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவரும், கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான கொங்கு ராஜா மணி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் முத்து விஸ்வநாதன், கொங்குநாடு விவசாயிகள் கட்சி தலைவர் முருகேஷ், துணைத்தலைவர் சிலிக் ராமசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத்தலைவர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் ரமேஷ் சிவக்குமார், தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

வறட்சி மாநிலம்

ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வடிவேல், தி.மு.க. சார்பில் செந்தில்குமார், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உள்பட விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம் பகுதிகளில் காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக சிறு, குறு விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

அவினாசி– அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினார்கள். இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்–அமைச்சரை இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து முறையிடுவதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.


Next Story