பெட்டி கடைக்காரருடன் தகராறு தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி–உதை; வீடு சூறை மனவேதனையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
பெட்டிகடைக்காரருடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட வாலிபரை அடித்து உதைத்த கும்பல், அவரது வீட்டையும் சூறையாடினர். இதில் மனவேதனை அடைந்த வாலிபர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடைக்காரருடன் தகராறு ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் பகுதியைச்
ஊத்துக்கோட்டை,
பெட்டிகடைக்காரருடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட வாலிபரை அடித்து உதைத்த கும்பல், அவரது வீட்டையும் சூறையாடினர். இதில் மனவேதனை அடைந்த வாலிபர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைக்காரருடன் தகராறுஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர், அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியில் உள்ள முக்கரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் புகையிலை பொருட்களை கேட்டனர்.
அதற்கு விஜயகாந்த், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் விற்பது இல்லை என்று கூறினார். இதனால் அந்த வாலிபர்கள், கடைக்காரர் விஜயகாந்துடன் தகராறில் ஈடுபட்டனர்.
அடி–உதைஅப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த முரளி(வயது 24) என்பவர் பெட்டி கடைக்காரர் விஜயகாந்துக்கு ஆதரவாக வாலிபர்களிடம் தட்டிக்கேட்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், முரளியை அடித்து உதைத்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால் திரும்பிச் சென்ற 5 வாலிபர்களும், முக்கரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த மேலும் 15 பேருடன் சேர்ந்து முரளி வீட்டுக்கு சென்று மீண்டும் அவரை அடித்து உதைத்தனர். அவரது வீட்டையும் சூறையாடினர். முரளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்திய 20 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
தற்கொலை முயற்சிஇதனால் மனவேதனை அடைந்த முரளி, தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வெங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின்பேரில் ஊத்துக்கோட்டை போலீசார், தாக்குதல் நடத்திய முக்கரம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ஜெகன், சரவணன், பிரதீப், அப்பு, தேவா உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்க ஊத்துக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கம் உத்தரவின் பேரில் முக்கரம்பாக்கம் காலனி, நெல்வாய் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.