பொன்னேரியில் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் ‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:– கடந்த 12–ந் தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெ
மீஞ்சூர்,
மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் ‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த 12–ந் தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெற் பயிர்கள் கருகியது. பொன்னேரியில் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது. காட்டூர் கிராமத்தில் ஆய்வு செய்த போது விவசாயிகளின் கவலை தெரிந்தது.
மத்திய குழு தமிழகத்தில் பார்வையிட வரும் போது அவர்களுடன் மாநில அரசும் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்–அமைச்சர் ஏற்கனவே பொன்னேரி பகுதிக்கு வந்து பார்வையிட்டு உள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டூர் கிராமத்தில் பயிர்களை ஆய்வு செய்யும் பணியில் ஒரு கிராம நிர்வாக அலுவலர் மட்டும் ஈடுபட்டு உள்ளார். நிவாரணப்பணிகளில் பலர் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், அழிஞ்சிவாக்கம் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.