கல்யாணில் ஓடும் ரெயிலில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்


கல்யாணில் ஓடும் ரெயிலில் கொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:19 AM IST (Updated: 27 Dec 2016 3:19 AM IST)
t-max-icont-min-icon

கல்யாணில் ஓடும் ரெயிலில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 6 பேர் போலீசில் சிக்கினர். ஓடும் ரெயிலில் கொள்ளை மும்பை குர்லா டெர்மினசில் இருந்து பிகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த ரெயில் கல்யாண் ரெயில் நிலையத்தி

மும்பை

கல்யாணில் ஓடும் ரெயிலில் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 6 பேர் போலீசில் சிக்கினர்.

ஓடும் ரெயிலில் கொள்ளை

மும்பை குர்லா டெர்மினசில் இருந்து பிகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த ரெயில் கல்யாண் ரெயில் நிலையத்தில் நின்றுவிட்டு புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது 14 பேர் கொண்ட கொள்ளை கும்பல் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி கத்திமுனையில் பயணிகளிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து கல்யாண் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்கள் உருவத்தை கொண்டு அவர்களை வலைவீசி தேடிவந்தனர்.

6 பேர் கைது

இந்த கொள்ளையில் கல்யாணை சேர்ந்த சஹாபாஜ் சகீல்சேக்(22), சத்தாம் ஹுசைன்சேக்(20) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி கொள்ளையில் ஈடுபட்ட நாசிக் மற்றும் தானேயை சேர்ந்த சச்சின் சுபாஷ்(18), சதிஷ் சத்யா(20), ரவிந்திரா நாம்தேவ்(18), சாகர் ஸ்ராவன்(22) ஆகிய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 செல்போன்கள், 2 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story