‘பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறவில்லை’ சரத்பவார் மீது தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு
‘‘பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறியது கிடையாது’’ என்று சரத்பவார் மீது முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்குதல் தொடுத்தார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களுடன் நேரடி
மும்பை
‘‘பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறியது கிடையாது’’ என்று சரத்பவார் மீது முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்குதல் தொடுத்தார்.
தேவேந்திர பட்னாவிஸ்முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். அப்போது, ‘‘உங்களுக்கு பிரதமர் ஆவதற்கு ஆசை இருக்கிறதா?’’ என்று மாணவர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:–
பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறியது கிடையாது. உதாரணமாக, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அல்லது சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை எடுத்து கொள்ளலாம். ஆகையால், என்னை முதல்–மந்திரியாக தொடர்ந்து இருக்க விடுங்கள். அரசுக்காக பணிபுரிய ஐ.ஐ.டி. மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
வியக்கத்தக்க யோசனைகள்ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு ஊழலை வேரறுக்க எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை. பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது தான் இந்த செயல்பாட்டின் முதற்கட்ட பலன். பிரதமர் மோடி தலைமையின்கீழ், நாட்டை 5 ஆண்டுக்குள் நம்மால் உருமாற்ற முடியும். இளைஞர்களுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒவ்வொரு கலந்துரையாடலிலும் புதிய விஷயங்களையும், வியக்கத்தக்க யோசனைகளையும் நான் கற்கிறேன்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
ராகுல்காந்திகுடும்ப அரசியல் பற்றியும் ராகுல்காந்தியின் செயல்பாடு பற்றியும் மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ‘‘நேரு–காந்தி குடும்பத்தில் வாரிசாக இருப்பது தான் ராகுல்காந்தியின் ஒரே தகுதி’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்தார்.