கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி நண்பர் படுகாயம்
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் மீது மோதல் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அற்புதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை (
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது மோதல்புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அற்புதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை (வயது 37). இவர் அப்பகுதியில் சொந்தமாக பஞ்சர் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பொன்னுச்சாமி (35) என்பவரை அழைத்து கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் புனல்குளம் கிராமத்திற்கு வந்தார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செல்லப்பிள்ளை ஓட்டினார். பொன்னுச்சாமி பின்னால் அமர்ந்து வந்தார். கந்தர்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல் பட்டி என்ற இடத்தில் வந்தபோது பின்னால் இலுப்பூரை சேர்ந்த சண்முகம் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
வாலிபர் பலிஇதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்லப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பொன்னுச்சாமி படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த பொன்னுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்லப்பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கார் டிரைவர் சண்முகம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.