நரங்கிப்பட்டு பகுதியில் வரத்துவாரி ஆக்கிரமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி மனு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்


நரங்கிப்பட்டு பகுதியில் வரத்துவாரி ஆக்கிரமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி மனு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்
x
தினத்தந்தி 27 Dec 2016 4:15 AM IST (Updated: 27 Dec 2016 4:15 AM IST)
t-max-icont-min-icon

நரங்கிப்பட்டு பகுதியில் வரத்துவாரி ஆக்கிரமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூ

புதுக்கோட்டை,

நரங்கிப்பட்டு பகுதியில் வரத்துவாரி ஆக்கிரமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்ககோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று பேசினார்.

வரத்துவாரி ஆக்கிரமிப்புகள்

கூட்டத்தில் கறம்பக்குடியை சேர்ந்த குணா என்பவர் கலெக்டர் கணேஷிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:–

கறம்பக்குடி பேரூராட்சி புளியஞ்சோலை 7–வது வார்டு நரங்கியப்பட்டு போகித்தெரு நீர் நிலை வரத்து வாரி சுமார் 30 அடி அகலம் கொண்டது. இந்த வரத்து வாரியை இப்போது அங்கே இருப்பவர்கள் பேரூராட்சி நிர்வாக உதவியோடு அந்த நீர் நிலை வரத்து வாரியை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து தன் வசமாக வைத்துள்ளனர். இதனால் மழை காலத்தில் மழை நீர் வெளியேர முடியாமல் வீடுகளுக்குள்ளும், ரோட்டிலும் ஓடுகிறது. மழை காலங்களில் மழை நீர் வெளியேர முடியாமல் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவி வருகிறது. எனவே நீர் நிலை வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகம்

புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழங்களின் ஓய்வுபெற்ற தொழிலாளர்களை சங்கத்தினர் சார்பில் கொடுத்த தெரிவித்திருந்ததாவது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015–ல் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி 119 சதவீதம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.அதற்குண்டான அரியர்ஸ் தொகை வழங்கப்படவில்லை. 2016–ல் அறிவித்த அகவிலைப்படி 125 சதவீம் மட்டும் டிசம்பர் மாதம் அறிவித்த 132 சதவீதம் இது வரை வழங்கப்படவில்லை. அரியர்ஸ் தொகையும் உடன வழங்க வேண்டும். 30 முதல் 35 ஆண்டுகள் பணி முடித்து செல்லும்போது பிஎப் தொகையை கூட ஒரு ஆண்டுக்கு பின் தேதியிட்டு மாற்றக்கூடிய செக் மட்டும் வழங்கப்படுகிறது. வேறு எந்த வித பணபலன்களும் வழங்குவதில்லை. ஓய்வு ஊதியதாரர்களுக்கு பண பலன்கள் வழங்காததால் உயர் நீதிமன்றம் சென்று 12 மாதம் தவனைக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பெறப்பட்டது. அதன்படி 2016–ம் ஆண்டு 10–வது மாதம் முதல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணபலன்கள் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து உடன் பண பலன் வழங்கிட வேண்டும். இறந்த தொழிலாழியின் குடும்பத்தினருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமனம் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் நிலை உள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வயதான காலத்தில் உரிய மருத்துவ சிகிச்சை பெற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறி அளித்தார்.


Next Story