தூத்துக்குடி அருகே குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


தூத்துக்குடி அருகே குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2016 4:59 AM IST (Updated: 27 Dec 2016 4:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாகி ஒடி வீணாகி வருகிறது. உடனடியாக உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குழாய் உடைந்து குடிநீர் ஆறாகி ஒடி வீணாகி வருகிறது. உடனடியாக உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சி திட்டங்கள் மூலம் குடிநீரின் அளவு குறைந்து கிடைப்பதால், நகரில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லாததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்து உள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் சேகரித்து வரும் நிலை உள்ளது.

குழாய் உடைப்பு

கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மற்றொரு புறம் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டு சென்றும், குழாய் உடைப்பு சரி செய்யப்படாமல் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் 100 மீட்டர் தூரத்துக்குள் 3 இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

சுகாதாரகேடு அபாயம்

இந்த நிலையில், தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் அருகே உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டில் தனியார் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து இரவு, பகலாக தண்ணீர் ஆறாக ஓடி வீணாகி வருகிறது. குழாய் உடைப்பு உள்ள பகுதியில் லாரி டிரைவர்கள் ஒரு வளையம் போன்று அமைத்து உள்ளனர். அதில் இருந்து தண்ணீரை எடுத்து குளித்தும், லாரிகளை கழுவியும் வருகின்றனர். இதனால் கழிவுநீர் குடிநீர் குழாய் வழியாக மீண்டும் சென்று பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு பரவும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுப்பதுடன், சுகாதாரக்கேடு பரவும் அபாயத்தையும் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story