தூத்துக்குடியில் சுனாமி நினைவுநாள்: கடலில் மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி சிறுவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு


தூத்துக்குடியில் சுனாமி நினைவுநாள்: கடலில் மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி சிறுவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு
x
தினத்தந்தி 27 Dec 2016 4:59 AM IST (Updated: 27 Dec 2016 4:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சுனாமி நினைவுநாளையொட்டி கடலில் மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிறுவர்கள் மெழுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர். சுனாமி பாதிப்பு கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இந்தோனேஷியா அருகே பசுபிக் பெருங்கடலில் உருவான நில

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சுனாமி நினைவுநாளையொட்டி கடலில் மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிறுவர்கள் மெழுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.

சுனாமி பாதிப்பு

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இந்தோனேஷியா அருகே பசுபிக் பெருங்கடலில் உருவான நிலநடுக்கம் சுனாமி அலைகளாக உருவெடுத்தது. பல நாடுகளை பதம் பார்த்த சுனாமி, தமிழ்நாட்டில் கடலூர், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல ஆயிரம் மக்களின் உயிரை பறித்தது மட்டுமின்றி, பொதுமக்களின் உடமைகளையும் அழித்து விட்டு சென்றது.

உயிரிழப்பு

இந்த சுனாமி தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் 9 பேரும், நெல்லை மாவட்டத்தில் 5 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் 12 பேரும் உயிர் இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 615 குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி தாலுகாவில் 634 வீடுகளும், சாத்தான்குளத்தில் 5 வீடுகளும், திருச்செந்தூரில் 83 வீடுகளும், விளாத்திகுளத்தில் 13 வீடுகளும் சேதம் அடைந்தன. மாவட்டத்தில் மீனவர்களின் 638 கட்டுமரங்கள் சேதம் அடைந்தன.

மலர் தூவி அஞ்சலி

இந்த சுனாமி கோரத்தாண்டம் ஆடிய நாள் மக்கள் மனதில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுனாமி தினம் நேற்று தூத்துக்குடியில் கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மீனவ மக்கள் சுனாமியின் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயர் காலனி பகுதியில் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்போது சிலர் துயரத்தை தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு

நிகழ்ச்சியில் சுனாமியில் இறந்தவர்கள் நினைவாகவும், இது போன்ற துயர சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என்றும் சிறுவர்கள், மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கு கணவாய் மீன்பிடி தொழிலாளர் நலச்சங்க தலைவர் ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பொருளாளர் எம்.முனியசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story