கலெக்டர் அலுவலகம் முன்பு 2–வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உள்பட 280 பேர் கைது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உள்பட 280 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலா
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உள்பட 280 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் சென்னை, திருவள்ளூர் மற்றும காஞ்சீபுரம் மாவட்டங்களை புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்டு இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க்கடனையும் ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று 2–வது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அவர்கள் தள்ளிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கைதுஇந்த போராட்டத்திற்கு மாநில விவசாயிகள் சங்க தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், சந்திரன், வக்கீல் கிருஷ்ணன், கண்ணகி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உள்பட 280 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், நகர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.