எரிமேலி தர்மசாஸ்தா கோவில் அன்னதானத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து பருப்பு, காய்கறிகள் அனுப்பப்பட்டன
எரிமேலி தர்மசாஸ்தா கோவில் அன்னதானத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து பருப்பு, காய்கறிகள் அனுப்பப்பட்டன. அய்யப்ப பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டிருக்கும். இந்த 2 மாதங்களில் மட்டும் ஏராளமான அய
ராமநாதபுரம்,
எரிமேலி தர்மசாஸ்தா கோவில் அன்னதானத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து பருப்பு, காய்கறிகள் அனுப்பப்பட்டன.
அய்யப்ப பக்தர்கள்சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் அனைத்து நாட்களும் திறக்கப்பட்டிருக்கும். இந்த 2 மாதங்களில் மட்டும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்களும் இந்த மாதங்களில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
அய்யப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதேபோன்று எரிமேலி இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள அய்யப்ப சேவா சங்கத்தினர் அரிசி, காய்கறி போன்ற பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
பருப்பு, காய்கறிகள்எரிமேலி தர்மசாஸ்தா கோவிலில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் சார்பில் தர்மசாஸ்தா கோவிலுக்கு வரும் அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் சீரக கசாய குடிநீர் மற்றும் காலை, மதியம், இரவு என மூன்று வேளை அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இதற்காக ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சங்கத்தின் சார்பில் 8 டன் துவரம் பருப்பு உள்பட காய்கறிகள் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டன.
இவை அனைத்தும் ராமநாதபுரம் கோட்டை பிள்ளையார் கோவில் வளாகத்தில் பூஜை செய்யப்பட்டு கண்டெய்னர் லாரி மூலம் நேற்று எரிமேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.