தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறலாம் கலெக்டர் ரவிகுமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறலாம் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறலாம் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஓய்வூதியதாரர்கள்
தூத்துக்குடி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறலாம். இதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 486 இ–சேவை மையங்களை அமைத்து உள்ளது. இதன் மூலம் விருப்பம் உள்ள ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
வாழ்வு சான்றிதழ்
மின்னணு வாழ்வு சான்றிதழ் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள், இந்த நிறுவனத்தின் இ–சேவை மையத்தில் தங்களது ஆதார் எண், ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள் மற்றும் கைவிரல் ரேகையைப் பதிவு செய்து மின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.10 வசூல் செய்யப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story