முத்துப்பேட்டை அருகே விவசாயி மீது தாக்குதல் எலக்ட்ரீசியன் 3 பேருக்கு வலைவீச்சு


முத்துப்பேட்டை அருகே விவசாயி மீது தாக்குதல் எலக்ட்ரீசியன் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Dec 2016 9:38 PM IST (Updated: 27 Dec 2016 9:38 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே உள்ள சிறுபனையூரை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 48). விவசாயி. இவருடைய வீட்டில், அதே ஊரை சேர்ந்த எலக்ட்ரீசியன்கள் ஆனந்த், பிரசாத், புகழேந்தி ஆகிய 3 பேர் வயரிங் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் வயரிங் வேலை சரியாக ச

முத்துப்பேட்டை, 

முத்துப்பேட்டை அருகே உள்ள சிறுபனையூரை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 48). விவசாயி. இவருடைய வீட்டில், அதே ஊரை சேர்ந்த எலக்ட்ரீசியன்கள் ஆனந்த், பிரசாத், புகழேந்தி ஆகிய 3 பேர் வயரிங் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் வயரிங் வேலை சரியாக செய்யவில்லை எனக்கூறி வடிவழகன், எலக்ட்ரீசியன்களை திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து கட்டை, கம்பால் வடிவழகனை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வடிவழகன் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story