இழப்பீடு வழங்கக்கோரி பட்டாசு விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் போராட்டம்


இழப்பீடு வழங்கக்கோரி பட்டாசு விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 27 Dec 2016 9:41 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் நார்ணாபுரத்தில் ரமேஷ்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்டதீ விபத்தில் பாடுகாயம் அடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 4 பேரும் நேற்று அடுத்தடுத்து

 

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் நார்ணாபுரத்தில் ரமேஷ்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்டதீ விபத்தில் பாடுகாயம் அடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 4 பேரும் நேற்று அடுத்தடுத்து இறந்து போனார்கள். உயிர் இழந்த மாமணிராஜ், முத்துமாரி,, வீரலட்சுமி, செல்வராஜ் ஆகியோரின் குடும்பத்தினரும் கம்யூனிஸ்டு கட்சியினரும் இறந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி உதவியும் இறுதி சடங்கிற்குரூ. 20 ஆயிரமும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கினால்தான் உடலை பெற்றுச் செல்வோம் என கூறி போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சரவணகுமார்(சிவகாசி) குமார் (சாத்தூர்) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் சாத்தூர் கோட்டாட்சியர் கிருஷ்ணம்மாள், சிவகாசி தாசில்தார் பாஸ்கரன், சாத்தூர் தாசில்தார் புஷ்பராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் இறந்தவர்களின் உடலை மாலையில் பெற்றுச் சென்றனர்.


Next Story