80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை நாகை கோர்ட்டு தீர்ப்பு


80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை நாகை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 10:36 PM IST)
t-max-icont-min-icon

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது. மூதாட்டி பலாத்காரம் நாகை வெளிப்பாளையம் மருத்துவ தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் சந்துரு என்கிற சந்திரசேகரன் (வயது28). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 6–ந் தே

நாகப்பட்டினம்,

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மூதாட்டி பலாத்காரம்

நாகை வெளிப்பாளையம் மருத்துவ தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் சந்துரு என்கிற சந்திரசேகரன் (வயது28). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 6–ந் தேதி வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு கோவிலில் படுத்திருந்த 80 வயது மூதாட்டியை அடித்து துன்புறுத்தி பலாத்காரம் செய்தார். இதில் காயம் அடைந்த மூதாட்டி நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து மூதாட்டியின் மகள் கொடுத்த புகாரின்பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாகை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக அமீர்பீவி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி செல்வசுந்தரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் மூதாட்டியை பலாத்காரம் செய்த சந்திரசேகரனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


Next Story