திருவெண்ணெய்நல்லூர் அருகே 40½ பவுன் நகை கொள்ளை வழக்கில் 3 பேரிடம் போலீஸ் விசாரணை


திருவெண்ணெய்நல்லூர் அருகே 40½ பவுன் நகை கொள்ளை வழக்கில் 3 பேரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 27 Dec 2016 11:59 PM IST (Updated: 27 Dec 2016 11:59 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே 40½ பவுன் நகை கொள்ளை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை கொள்ளை திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய சகோதரர் ராஜா. இவர்கள் ஒரே வீட்டில் சுரேஷ் குடும்பத்தினர் கீழ்தளத

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே 40½ பவுன் நகை கொள்ளை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய சகோதரர் ராஜா. இவர்கள் ஒரே வீட்டில் சுரேஷ் குடும்பத்தினர் கீழ்தளத்திலும் ராஜா குடும்பத்தினர் மேல்தளத்திலும் வசித்து வருகின்றனர். சகோதரர்களான இவர்கள் இருவரும் கடந்த 25–ந் தேதி வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சுரேசின் மனைவி கோகிலாவும், ராஜாவின் மனைவி பூங்குழலியும் தனியாக இருந்தனர்.

இவர்கள் இருவரும் அன்று இரவு தங்கள் வீட்டை பூட்டிவிட்டு அவரவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 2 வீடுகளின் கதவு பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

3 பேரிடம் விசாரணை

இதில் ராஜா வீட்டில் 17½ பவுன் நகை, ரூ.18 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளிப்பொருட்களும், சுரேஷ் வீட்டில் 23 பவுன் நகை, ரூ.33 ஆயிரம் ரொக்கம், 2½ கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போயிருந்தது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே கிராமத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story