விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு


விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2016 3:15 AM IST (Updated: 28 Dec 2016 1:03 AM IST)
t-max-icont-min-icon

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். விவசாய பயிர்கள் சேதம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி

கொழிஞ்சாம்பாறை,

விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்.

விவசாய பயிர்கள் சேதம்

பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கஞ்சிக்கோடு அருகே உள்ள சீனிக்காடு, முக்கரம்காடு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் முகாமிட்டது.

பின்னர் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் கண்ணன், சுனில்குமார், பார்வதி ஆகியோருக்கு சொந்தமான வாழை தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த 100–க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. பின்னர் அங்கு ½ ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த விவசாய பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியது.

பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

காட்டு யானை குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் தீப்பந்தம் மற்றும் பட்டாசு வெடித்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story