குமரி மீனவர்கள் உள்பட 15 பேர் ஈரானில் சிறைபிடிப்பு மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு


குமரி மீனவர்கள் உள்பட 15 பேர் ஈரானில் சிறைபிடிப்பு மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 28 Dec 2016 3:45 AM IST (Updated: 28 Dec 2016 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் உள்பட 15 பேரை மீட்டுத்தரக்கோரி அவர்களுடைய உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– எல்லை தாண்டி வந்ததாக... கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜார்ஜ் (35), கிர்பர் (39), வர்க்

நாகர்கோவில்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் உள்பட 15 பேரை மீட்டுத்தரக்கோரி அவர்களுடைய உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எல்லை தாண்டி வந்ததாக...

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜார்ஜ் (35), கிர்பர் (39), வர்க்கீஸ் வர்மா (42), சிரிஜித் (30), ஆன்டனி ஜேக்கப் (42), ரவி (36), சிரீனு (29), நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிளவ்டின், சலைட்ராஜா, வின்சென்ட், சாகர், கென்னடி, பிரசாத், ஆன்டனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் ஆகிய 15 மீனவர்கள் பகரின் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

அவர்கள், அந்நாட்டில் சிலரின் விசைபடகுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் 15 பேரும் கடந்த 20–10–2016 அன்று பகரினிலிருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதைத்தொடர்ந்து 22–10–2016 அன்று மீனவர்கள் அனைவரும் எல்லையைத்தாண்டி வந்ததாக ஈரான் நாட்டு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களாக அவர்கள் சென்ற விசைப்படகிலேயே இக்கீஸ் என்ற தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதை ஈரான் அரசு அங்கு இருக்கும் இந்திய தூதரகத்துக்கு அறிவிக்கவில்லை. மீனவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் எதுவும் வழங்கப்படவில்லை. 65 நாட்களாக குளிப்பதற்கு கூட வசதியில்லாமல் தவிக்கிறார்கள். எனவே மீனவர்கள் 15 பேரையும் மீட்க நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்க வந்தபோது எம்.எல்.ஏ. ஆஸ்டின், தெற்காசி மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்தந்தை சர்ஜில் உள்பட பலர் உடனிருந்தனர். இதுபோல நெல்லை மாவட்ட கலெக்டருக்கும் ஈரானில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story