மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்: குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வருவதாக கலெக்டர் தகவல்
மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க இருப்பதால் குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– போக்குவரத்து மா
நாகர்கோவில்,
மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க இருப்பதால் குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
போக்குவரத்து மாற்றம்மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதால் இன்று (புதன்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி நாகர்கோவில்– மார்த்தாண்டம், களியக்காவிளை, கொல்லங்கோடு, திருவனந்தபுரம் செல்லும் அனைத்து புறநகர் பஸ்களும் வெட்டுமணி வழியாக வழக்கமாக இயக்கப்படும்.
புதுக்கடை, தேங்காப்பட்டணம், இனயம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வெட்டுமணியிலிருந்து இயக்கப்படும்.
கொல்லங்கோடு, இரையும்மன்துறை, பனச்சமூடு, அருமனை, ஆலஞ்சோலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் தடம் எண் 82, 83, 84, 85, 86 குழித்துறை சந்திப்பிலிருந்து இயக்கப்படும்.
நாகர்கோவில் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், இலகு வாகனங்களும் குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை, மேல்புறம், திக்குறிச்சி, பயணம், உண்ணாமலைக்கடை, சிராயன்குழி வழியாக இயக்கப்படும்.
மேலும் குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை, மேல்புறம், ஞாறான்விளை, நேசமணி பாலம், முபாரக் ஓட்டல் வழியாகவும் இயக்கப்படும்.
நாகர்கோவில் மார்க்கமாக...மார்த்தாண்டம்–வெட்டுமணி மற்றும் வெட்டுமணி–குழித்துறை ஒரு வழிப்பாதை காரணமாக மார்த்தாண்டத்திலிருந்து குழித்துறை, மேல்புறம், நேசமணி பாலம் வழியாக சர்குலர் பஸ்கள் தேவைக்கேற்ப இயக்கப்படும்.
நாகர்கோவில் மார்க்கமாக வரும் அனைத்து கனரக வாகனங்களும் குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை, மேல்புறம், அருமனை, ஆற்றூர் ஜங்சன், உண்ணாமலக்கடை, சிராயன்குழி வழியாக இயக்கப்படும்.
நெல்லை மாவட்டம் மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் குழித்துறையிலிருந்து மேல்புறம், அருமனை, களியல், ஆரல்வாய்மொழி வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.