பெரம்பலூர் மாவட்டத்தை கலக்கிய நகை கொள்ளையர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூர் மாவட்டத்தை கலக்கிய நகை கொள்ளையர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பெண்களிடம் நகை பறிப்பு பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே மங்கூன், தேனூர், புதுவிராலிப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதியில் தனியாக இருக்கும் பெண்களை கட்டையால் தாக்கி அவர்கள் அ
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தை கலக்கிய நகை கொள்ளையர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெண்களிடம் நகை பறிப்பு
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே மங்கூன், தேனூர், புதுவிராலிப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதியில் தனியாக இருக்கும் பெண்களை கட்டையால் தாக்கி அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன்சாலை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 38) பறித்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் (நவம்பர்) 25–ந்தேதி சீனிவாசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளை
பெரம்பலூர் புது பஸ் நிலையத்தில் கடந்த 1–ந்தேதி ஆலம்பாடி ரோடு பகுதியை சேர்ந்த பிச்சை (51)யிடம் ஒருவர் பணம் திருடிக் கொண்டு ஓடினார். அந்த நபரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (21) என்பதும், அரும்பாவூர், வெண்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் ஓட்டை பிரித்து நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் அவர் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த சீனிவாசன், வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா பரிந்துரை செய்தார். அதன் பேரில் அந்த 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீனிவாசன், வெங்கடேசன் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.