கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்று வேளாண்மை இணை இயக்குனர் அல்தாப் கூறினார். அறிக்கை கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அல்தாப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– கரூர் மாவட்டத்த
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்று வேளாண்மை இணை இயக்குனர் அல்தாப் கூறினார்.
அறிக்கைகரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அல்தாப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3,540 எக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. சிறு தானிய பயிர்கள் 8,174 எக்டேரும், பயறு வகைகள் 4,023 எக்டேரும், எண்ணெய் வித்து பயிர்கள் 3,283 எக்டேரும், கரும்பு 340 எக்டேரும், கரும்பு மறுதாம்பு 1,736 எக்டேரும் பயிரிடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 76 எக்டேரில் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத காரணத்தால் ஏற்படும் வறட்சியை தவிர்க்க பிங்க் பிக்மெண்டேடு, மெத்தைலோட்ரோபிக் பாக்டீரியா என்ற திரவ நுண்ணுயிரியை ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் அளவில் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் இலைகள் நன்கு நனையும் படி தெளிக்கவும். பயிர்களின் முக்கிய வளர்ச்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிப்பதன் மூலம் பயிர் வறட்சியை தாங்குகிறது.
மானியம்இதைத்தொடர்ந்து பொட்டாசியம் குளோரைடு, 1 சதவீதம் கரைசலை பயிர்களின் முக்கிய பருவத்தில் தெளிப்பதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாங்கும். மேலும் கரும்பு மற்றும் சோளத்தின் சோகையை நிலப்போர்வையாக பயன்படுத்துவதன் மூலம் நிலத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள், பழச்செடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று மா, கொய்யா, காய்கறிகள், மலர்கள், வாசனை பயிர்கள், வீட்டு காய்கறி தோட்டம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.