திருவானைக்காவல் ரெயில்வே பாலப்பணி: 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் கலெக்டர் பழனிசாமி தகவல்
திருவானைக்காவல் ரெயில்வே மேம்பால பணி 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் என கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார். சாலை அகலப்படுத்துதல் திருச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் காஜாமலையில் கலெக்டர் அலுவலக பங்களாவில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வரை இரு பு
திருச்சி
திருவானைக்காவல் ரெயில்வே மேம்பால பணி 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் என கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.
சாலை அகலப்படுத்துதல்திருச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் காஜாமலையில் கலெக்டர் அலுவலக பங்களாவில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வரை இரு புறமும் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருவதையும், திருவானைக்காவல் ரெயில்வே பாலப்பணியையும் கலெக்டர் பழனிசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் 224.415 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் என மொத்தம் ரூ.128 கோடியே 52 லட்சத்தில் 46 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 4 ஆற்றுப்பாலங்கள், 2 ரெயில்வே மேம்பாலங்கள் ரூ.131 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் ரூ.747 கோடியே 2 லட்சத்து மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.260 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது.
கருத்துருதிருச்சி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 164.70 கிலோ மீட்டர் நீளமுள்ள 84 சாலைகள் ரூ.71 கோடியே 20 லட்சத்தில் பராமரிக்கவும், ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பில் 3 பாலப்பணிகள் கட்டவும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வெளிவரலாம். இதேபோல ரூ.7 கோடியே 56 லட்சம் மதிப்பிலும் 3 பாலங்கள் கட்ட ஒப்பந்தம் விடப்பட உள்ளது.
ரூ.4 கோடியே 10 லட்சம் மதிப்பில் 2 பால வேலைகளுக்கான கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் இடது கரையில் இருந்து கல்லணை வரை செல்லும் சாலையின் இரு புறமும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட உள்ளது.
திருவானைக்காவல் ரெயில்வே பாலம்திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் திருவானைக்காவல் ரெயில்வே மேம்பால பணிகள் ரூ.47 கோடியே 30 லட்சம் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கின. பாலத்தின் மொத்த நீளம் 1430.284 மீட்டர் ஆகும். பாலத்தின் மொத்த அகலம் 17.20 மீட்டர் ஆகும். பாலம் நான்கு வழி சாலையாக அமைக்கப்படுகிறது. மொத்தம் 48 தூண்கள் நிறுவப்படுகின்றன. இந்த பணிகளில் 30 சதவீதம் முடிவடைந்து விட்டன. இந்த பாலப்பணி வருகிற 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும்.
திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாலப்பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரெயில்வே நிலத்தை பெற அதிகாரிகளுடன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதில் சுமுக தீர்வு ஏற்படும். இதேபோல ராணுவ நிலத்தை பெறவும் அதிகாரிகளுடன் பேசப்பட்டுள்ளன. 2 மாதத்திற்குள் ரெயில்வே மற்றும் ராணுவத்திடம் இருந்து நிலம் பெறப்பட்டு அந்த இடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும். ரெயில்வே நிர்வாகம் நிலத்தை கொடுக்க பணம் மற்றும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம். திருச்சி தேவதானம், லால்குடி காட்டூர், மஞ்சதிடல் ஆகிய இடங்களில் ரெயில்வே பாலம் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, நாகராஜன், உதவி பொறியாளர்கள் பெரியண்ணன், செந்தில்குமார், சமயசக்தி, ரெங்கவேல், நர்மதா உள்பட பலர் உடன் இருந்தனர்.