காரைக்காலை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் பா.ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம்
காரைக்கால் மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எம்.அருள் முருகன், மாநில ஓ.பி.சி. அணி தலைவர் ஜெ.துரை சேனாதிபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சித்திரைச்செல்வன், முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்காலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காரைக்கால் புறவழிச்சாலை பணிகளை வி
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எம்.அருள் முருகன், மாநில ஓ.பி.சி. அணி தலைவர் ஜெ.துரை சேனாதிபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சித்திரைச்செல்வன், முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரைக்காலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காரைக்கால் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனை அனைத்து துறைகளுக்கும் மருத்துவ அதிகாரிகளை நியமனம் செய்வதுடன், மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள நீட், ஜிப்மர் தேர்வுக்கு காரைக்கால் மாவட்ட மாணவர்களை தயார் செய்யும் வகையில் அரசே பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும், காவிரிநீர் கிடைக்காததாலும், பருவமழை பொய்த்ததாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் கணேஷ் நன்றி கூறினார்.

Next Story