பம்மலில், போலீஸ் எனக்கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட திருமண தரகர் கைது
சென்னையை அடுத்த பம்மலில் போலீஸ் எனக்கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட திருமண தரகரை போலீசார் கைது செய்தனர். வாகன சோதனை சென்னையை அடுத்த பம்மல், முத்தமிழ் நகர், மாதவி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50) .இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்ற
தாம்பரம்,
சென்னையை அடுத்த பம்மலில் போலீஸ் எனக்கூறி வாகன சோதனையில் ஈடுபட்ட திருமண தரகரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனைசென்னையை அடுத்த பம்மல், முத்தமிழ் நகர், மாதவி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50).இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பம்மல், நல்ல தம்பி சாலை அருகே சென்றபோது அவரை போலீஸ் எனக்கூறி ஒருவர் மடக்கி வாகன சோதனையில் ஈடுபட்டார். மேலும் ராஜ்குமாரிடம் வாகனத்தின் ஆவணங்கள் சரியில்லை என ரூ.500 வசூலித்துள்ளார். அந்த நபரின் மீது சந்தேகம் அடைந்த ராஜ்குமார் சங்கர்நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சிறையில் அடைப்புஅதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் செங்குன்றம், எம்.ஜி.ஆர். நகர், வி.ஜி. தெருவை சேர்ந்த இளங்கோவன் (47), திருமண தரகர் என்பதும், போலீஸ் போல் நடித்து வாகன சோதனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இளங்கோவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.