மலைக்குன்று ஆக்கிரமிப்பு தொடர்பான அமைதிக்குழு கூட்டம் உடன்பாடு ஏற்படாமல் ஒத்திவைப்பு
திருக்கழுக்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட அழகுசமுத்திரம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் இந்துக்கள் விழாக்காலங்களில் பரிவேட்டை செய்து வழிபடுகின்றனர். இந்த இடத்தில் சோகன்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைக்குன்றுகளை
திருக்கழுக்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட அழகுசமுத்திரம் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் இந்துக்கள் விழாக்காலங்களில் பரிவேட்டை செய்து வழிபடுகின்றனர். இந்த இடத்தில் சோகன்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலைக்குன்றுகளை ஆக்கிரமிப்பு செய்து சிலுவைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அகற்றக்கோரி அழகுசமுத்திர கிராம மக்கள் திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே அமைதிக்குழு கூட்டம் தாசில்தார் சீதா தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணிவரை நடைபெற்றது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.