பழவேற்காடு முகத்துவாரத்தில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின
பழவேற்காடு பகுதியில் கடந்த 12–ந்தேதி வீசிய வார்தா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பழவேற்காடு ஏரியும், கடலும் கலக்கும் முகத்துவாரப்பகுதியில் 6 ராட்சத ஆமைகள் இறந்து கிடந்தன. வார்தா புயலின்போது மணலை தோண்டி முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வந்த
பொன்னேரி,
பழவேற்காடு பகுதியில் கடந்த 12–ந்தேதி வீசிய வார்தா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பழவேற்காடு ஏரியும், கடலும் கலக்கும் முகத்துவாரப்பகுதியில் 6 ராட்சத ஆமைகள் இறந்து கிடந்தன.
வார்தா புயலின்போது மணலை தோண்டி முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வந்த இந்த ஆமைகள் புயலின் வேகத்திலும் கடலில் ஏற்பட்ட ராட்சத அலையின் காரணமாகவும் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் அரியவகை ராட்சத ஆமைகளும் உயிர் இழந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
Next Story