தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று நூதன முறையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று நூதன முறையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 3 நாட்கள் நூதன முறையில் காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு கருகிய பயிர்களுடன் விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராகவன், பொருளாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
வறட்சி மாவட்டமாக...
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மானாவாரி பயிர்களான உளுந்து, பாசிப்பயறு வகைகள், கம்பு, சோளம் உள்ளிட்டவைகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். நெல், மக்காச்சோளம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பயிர் செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
யார்–யார்?
போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் சீனிவாசன், சுப்பையா, கிருஷ்ணன், துணை செயலாளர்கள் ராமசுப்பு, ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, குமாரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story