கண்ணமங்கலத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்கள் கைவரிசை
கண்ணமங்கலத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் கும்பாபிஷேகம் கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீராமபக்தர் ஆஞ்சநேயர் – வரசித்த
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவில் கும்பாபிஷேகம்கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீராமபக்தர் ஆஞ்சநேயர் – வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை காண கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்திருந்தார்கள். அதனால் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கண்ணமங்கலம் குளத்துமேட்டு தெருவை சேர்ந்த தேவகி (வயது 70) என்பவர் உறவினர்களுடன் கும்பாபிஷேக விழாவுக்கு வந்திருந்தார். காலை 9.30 மணி அளவில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் முண்டியடித்து கொண்டு சென்றனர். அதனால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயம் சாமி தரிசனம் செய்ய சென்ற தேவகியும் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார்.
தங்க சங்கிலி பறிப்புதேவகி மற்றும் அவரது உறவினர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சிறிது தூரம் வந்தபோது, தேவகி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தேவகி மற்றும் அவரது உறவினர்கள் கும்பாபிஷேகத்தின் போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் தங்க சங்கிலி கிடைக்கவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிசுந்தரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.