அரசு மாணவர் விடுதியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணியாளர் நல சங்கம் கோரிக்கை


அரசு மாணவர் விடுதியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணியாளர் நல சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2016 4:00 AM IST (Updated: 28 Dec 2016 6:41 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி பணியாளர்கள் சங்க கூட்டம் மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையிலும், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் உள்ள மாணவர் விடுதியின

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி பணியாளர்கள் சங்க கூட்டம் மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையிலும், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் உள்ள மாணவர் விடுதியின் துப்புரவு பணியாளர்களை பணி மூப்பு அடிப்படையில் சமையலர் பணியிடத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், காலியாக உள்ள சமையலர் பணியிடங்கள், காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story