நெல்லை அருகே பரிதாபம் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை
நெல்லை அருகே ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நெல்லை,

என்ஜினீயர் தற்கொலை
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலக்கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 29). என்ஜினீயர். அவருக்கு திருமணம் ஆகவில்லை. வேலை கிடைக்காததால் குமார் மனவருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் குமார் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் குமார் தற்கொலை செய்துகொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குமார் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story