மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி கல்வி மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ், மதிப்பெண்கள் பட்டியல் வழங்கும் சிறப்பு முகாம் 9–ந் தேதி தொடங்குகிறது
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலை நெறி தொடர் கல்லியில் படித்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ், மதிப்பெண்கள் பட்டியல் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 9–ந் தேதி தொடங்குகிறது என பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
நெல்லை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலை நெறி தொடர் கல்லியில் படித்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ், மதிப்பெண்கள் பட்டியல் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 9–ந் தேதி தொடங்குகிறது என பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
சிறப்பு முகாம்நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககம் வழியாக படித்து மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ் பெற்று கொள்ளாத மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகதத்தில் உள்ள தொடர் கல்வி இயக்கக அலுவலகத்தில் வருகிற 9–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை மூன்று நாட்கள் நேரடி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுவரை மதிப்பெண், தற்காலிக சான்றிதழ் பெறாமல் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக கொண்டு உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பெற்று கொள்ளலாம். கல்வி கட்டணம் செலுத்த வேண்டியது இருந்தால் அதை செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு (2016–2017) தொலை நெறி தொடர் கல்வி இயக்ககத்தில் மாணவர்கள் சேர்க்கையான கடைசி தேதி வருகிற 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு, பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.