வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் தரையில் படுத்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
விருதுநகர், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்கக் கோரி, காத்திருக்கும் போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து போராட்டம் நடத்திய 8 பெண்கள் உள்பட 175 விவசாயிக
விருதுநகர்,
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்கக் கோரி, காத்திருக்கும் போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து போராட்டம் நடத்திய 8 பெண்கள் உள்பட 175 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வறட்சி பாதிப்பு
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைப்பது இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட நெல், மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து, துவரை, குதிரைவாலி, சோளம், நிலக் கடலை, வெங்காயம், கரும்பு, மிளகாய், பருத்தி, தென்னை, வாழை ஆகியவை கருகிவிட்டன. 3½ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் பாதிப்பு அடைந்து விட்டன.
நிவாரணம்
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிவாரண உதவி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர். இதன்படி விருதுநகரிலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். எனினும் விவசாய சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு போராட்டம் நடத்த வந்தனர். போலீசார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என அவர் களிடம் தெரிவித்தனர்.
கைது
ஆனாலும் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை இழுத்துச் சென்று கைது செய்து வேன்களில் ஏற்றினர். 8 பெண்கள் உள்பட 175 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

Next Story