குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் நஷ்டஈடு திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குடும்ப கட்டுப்பாடு திருவாரூர் விளமல் பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரு
திருவாரூர்,
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடும்ப கட்டுப்பாடுதிருவாரூர் விளமல் பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவருடைய மனைவி ஜெயசுதா (வயது 35). இவர்களுக்கு கடந்த 2005–ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. பிறகு மீண்டும் கர்ப்பமடைந்த ஜெயசுதாவுக்கு 2007–ம் ஆண்டு மே மாதம் 27–ந் தேதி திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு வாரத்துக்கு பிறகு அதே மருத்துவமனையில் ஜூன் மாதம் 4–ந் தேதி ஜெயசுதாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு 8 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு ஜெயசுதா மீண்டும் கர்ப்பமடைந்தார். அவருக்கு 3–வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட நிலையில் கர்ப்பம் தரித்ததால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கமும், ரூ.8 லட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என்று திருவாரூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் ஜெயசுதா சார்பில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
நஷ்ட ஈடு
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கினார். இதில் தனது குடும்ப சூழ்நிலை கருதி ஜெயசுதா அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்ததற்கு மருத்துவமனை டாக்டர்களின் சேவை குறைபாடு என்பது தெரிய வருகிறது. எனவே ஜெயசுதாவின் மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரமும், சேவை குறைபாட்டுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை அரசு மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும். இந்த தொகையை ஒரு மாத காலத்திற்குள் ஜெயசுதாவிற்கு வழங்க வேண்டும் என்றும் காலதாமதம் செய்து தொகை கொடுக்கும் பட்சத்தில் 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.