நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேர் கைது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்தை வறட
நாமக்கல்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நெற்பயிர் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்ட 41 ஆண்கள், 21 பெண்கள் உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story