வீடு, வீடாக சென்று ரேஷன் கார்டுகள் தணிக்கை செய்யும் பணியை 3 நாளில் முடிக்க வேண்டும் தாசில்தார் உத்தரவு


வீடு, வீடாக சென்று ரேஷன் கார்டுகள் தணிக்கை செய்யும் பணியை 3 நாளில் முடிக்க வேண்டும் தாசில்தார் உத்தரவு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:30 AM IST (Updated: 28 Dec 2016 11:06 PM IST)
t-max-icont-min-icon

வீடு, வீடாக சென்று ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்யும் பணியை 3 நாளில் முடிக்க வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களில் முன்னுரிமை பயனாளிகள் மற்றும் முன்

விழுப்புரம்,

வீடு, வீடாக சென்று ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்யும் பணியை 3 நாளில் முடிக்க வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களில் முன்னுரிமை பயனாளிகள் மற்றும் முன்னுரிமையற்ற பயனாளிகளை தேர்வு செய்தல், குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்கள், செல்போன் எண்கள், ஆதார் எண் இல்லாத குழந்தைகள் விவரங்கள் ஆகியவற்றை விற்பனை முனையத்தில் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணியில் வீடு, வீடாக சென்று களப்பணியாளர்கள், ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்து வருகின்றனர். விழுப்புரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அறிவுரை

கூட்டத்திற்கு குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி களப்பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை இணைக்கும் பணியை விடுபடாமல் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று மேற்கொள்ள வேண்டும். இந்த பணியை 3 நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் தனி வருவாய் ஆய்வாளர் தயாநிதி மற்றும் சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story