பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் பிரத்யங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் பிரத்யங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் வளர்க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அமாவாசை உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் பிரத்யங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் வளர்க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசைஉளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள பிரத்யங்கரா தேவிக்கு மாதந்தோறும் வரும் அமாவாசையன்று மிளகாய்(நிகும்பலா) யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத அமாவாசையான நேற்று பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீழ், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மிளகாய் யாகம்இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை ஒரு வெற்றிலையில் குறிப்பிட்டு அதனை யாகத்தின் உள்ளே போட்டனர். அதை தொடர்ந்து நெய், மிளகாய் உள்ளிட்டவைகளை காணிக்கையாக அளித்தனர். இதையடுத்து யாக சாலையில் மிளகாய் யாகம் வளர்க்கப்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.