வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்திவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். வெண்ணெய்காப்பு அலங்காரம் ராமபிரானின் உற்ற தோழனாக விளங்கிய அனுமன், ஆஞ்சநேயராக வணங்கப்படுகிறார். மார்கழி மாதம் மூல நட்
வேலூர்,
வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
வெண்ணெய்காப்பு அலங்காரம்ராமபிரானின் உற்ற தோழனாக விளங்கிய அனுமன், ஆஞ்சநேயராக வணங்கப்படுகிறார். மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அனுமன் பிறந்தநாளாகும். அமாவாசை தினத்தில் வரும் அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொணவட்டத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தரிசனம்அதேபோன்று கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ரங்காபுரம் கோதண்ட ராமர் கோவில், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில், ஏரியூர் ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. புதுவசூர் யோக ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.