கோவிலம்பாக்கத்தில் மாநகர பஸ் மோதி பெண் என்ஜினீயர் பலி
கோவிலம்பாக்கத்தில் மொபட் மீது மாநகர பஸ் மோதியதில் பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். என்ஜினீயர் சென்னையை அடுத்த தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி(வயது 38). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், வேளச்சேரியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர்
ஆலந்தூர்,
கோவிலம்பாக்கத்தில் மொபட் மீது மாநகர பஸ் மோதியதில் பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயர்சென்னையை அடுத்த தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி(வயது 38). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், வேளச்சேரியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அகிலாண்டேஸ்வரி, வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கோவிலம்பாக்கத்தில் மேடவாக்கம் நெடுஞ்சாலையில் சென்ற போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது.
மாநகர பஸ் மோதி பலிஇதை கண்ட அகிலாண்டேஸ்வரி, மாடு மீது மோதாமல் இருக்க மொபட்டை திருப்பினார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தி.நகரில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பஸ் அவரது மொபட் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அகிலாண்டேஸ்வரி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அகிலாண்டேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான திருவள்ளூரைச் சேர்ந்த குமார்(32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.