தட்டுப்பாடு இன்றி ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைக்க வேண்டும் விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்


தட்டுப்பாடு இன்றி ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைக்க வேண்டும் விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:00 AM IST (Updated: 29 Dec 2016 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். மையங்களில் தட்டுப்பாடு இன்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. ஆலோசனை கூட்டம் விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்

கூடலூர்,

ஏ.டி.எம். மையங்களில் தட்டுப்பாடு இன்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

ஆலோசனை கூட்டம்

விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் கூடலூர் செம்பாலாவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் முனியாண்டி, ஆலோசகர்கள் ஆறுமுகம், கமலசேகரன், வீரையா, முருகன், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாவட்ட செயலாளர் விஜயசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பின்னர் கூட்டத்தில் பணப்பிரச்சினையால் தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் படும் நிலை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் அவதி

பின்னர் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ. மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அதில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு நிலவுவதால் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள், ஆதிவாசி மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

பல கி.மீட்டர் தூரம் சென்று வங்கியிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுக்க பல மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனாலும் கைக்கு பணம் கிடைத்தபாடில்லை. இதனிடையே தோட்ட நிர்வாகங்கள் காசோலை மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறது. இதனால் காசோலையை மாற்ற முடியாமல் தொழிலாளர்கள் திணறி வருகின்றனர்.

ஏ.டி.எம். மையங்களில் பணம்

பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு இல்லாத நிலையில் அனைவரும் மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாறுவது இயலாத காரியம். எனவே அனைத்து தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் ஏ.டி.எம். மையங்கள் விரைவாக அமைக்க வேண்டும். மேலும் ஏ.டி.எம். மையங்களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story