கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பகல் கனவு காண்கின்றன சித்தராமையா சொல்கிறார்
கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் பகல் கனவு காண்கின்றன என்று சித்தராமையா கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கூட்டத்தில் முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:– பகல் கனவு காண்கின்றன சட்ட
பெங்களூரு
கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் பகல் கனவு காண்கின்றன என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கூட்டத்தில் முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–
பகல் கனவு காண்கின்றனசட்டமன்ற தேர்தலின்போது மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். சொன்னபடி நடந்து கொண்டுள்ளோம். நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதுபற்றி வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த பாடுபட வேண்டும்.
நமது அரசு, ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்களின் நலனை காக்கும் பணியை செய்துள்ளது. பா.ஜனதா 150 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 125 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று சொல்கின்றன. ஆட்சியை பிடிக்க அந்த கட்சிகள் பகல் கனவு காண்கின்றன.
மீண்டும் காங்கிரஸ் வெற்றிஇருப்பது 224 தொகுதிகள் தான். இதில் அவ்வளவு தொகுதிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக உழைப்போம். பிரதமர் மோடி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர் பொய் வாக்குறுதிகளை கொடுத்தார் என்பதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.